பலதும் பத்தும்

கறிவேப்பிலையில் மறைந்துள்ள நன்மைகள் என்னென்ன தெரியுமா?

கறிவேப்பிலை தினமும் சாப்பிட்டால் முடி வளர்ச்சிக்கு உதவும் என எல்லோரும் அறிந்த ஒரு விடயம் ஆகும். இருப்பினும் கருவேப்பிலை பற்றி அறிந்து கொள்ளாத சில விடயங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

கறிவேப்பிலையை தினசரி உணவில் சேர்த்து வந்தால், தற்போது பல சந்திக்கும் மூட்டு தொடர்பான பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம். அதுவும் இந்த கறிவேப்பிலையுடன் ஒருசில பொருட்களை சேர்த்து உட்கொள்ளும் போது, உடலுக்கு கால்சியம் போதுமான அளவு கிடைத்து, எலும்புகள் வலுவடையும். இப்போது எந்த உணவுப் பொருட்களை கறிவேப்பிலையுடன் சேர்த்து சாப்பிட்டால், இரட்டிப்பு கல்சியம் கிடைக்கும் என்பதை நாம் இங்கு பார்க்கலாம்.

கறிவேப்பிலையில் மறைந்துள்ள நன்மைகள் என்னென்ன தெரியுமா? | Do You Know The Hidden Benefits Of Curry Leaves

எள்ளு விதைகள்

எள்ளு விதைகளில் கால்சியம் அதிகம் உள்ளது. அதுவும் 1 டேபிள் ஸ்பூன் எள்ளு விதைகளில் 88 மிகி கால்சியம் உள்ளது. இது எலும்புகள், பற்கள் மற்றும் தசைகளின் செயல்பாட்டிற்கு உதவி புரிகிறது. மேலும் இவற்றில் ஆரோக்கியமான கொழுப்புக்கள், நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை உள்ளன. சிறந்த அளவில் கால்சியத்தைப் பெற எள்ளு விதைகளையும், கறிவேப்பிலையையும் வறுத்து பொடி தயாரித்து, சாதத்துடன் அல்லது இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.

கறிவேப்பிலையில் மறைந்துள்ள நன்மைகள் என்னென்ன தெரியுமா? | Do You Know The Hidden Benefits Of Curry Leaves

ராகி

தானியங்களிலேயே ராகியில் கால்சியம் ஏராளமான அளவில் உள்ளன. அதுவும் 100 கிராம் ராகியில் சுமார் 344 மிகி கால்சியம் உள்ளன. அதுவும் மற்ற தானியங்களை விட ராகியில் தான் கால்சியம் அதிகம் உள்ளது. சிறந்த அளவில் கால்சியத்தைப் பெற ராகி மாவுடன், கறிவேப்பிலையை வறுத்து சேர்த்து தோசையாகவோ அல்லது ரொட்டியாகவோ அல்லது கஞ்சியாகவோ உட்கொள்ளலாம்.

கறிவேப்பிலையில் மறைந்துள்ள நன்மைகள் என்னென்ன தெரியுமா? | Do You Know The Hidden Benefits Of Curry Leaves

பன்னீர்

பன்னீர் கால்சியம் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களுள் ஒன்று. அதுவும் 100 கிராம் பன்னீரில் 200-250 மிகி கால்சியம் உள்ளது. இது பற்கள் மற்றும் எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ளவும், தசைகளின் செயல்பாட்டை ஆதரிக்கவும், நரம்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. சிறந்த அளவில் கால்சியத்தைப் பெற பன்னீருடன் கறிவேப்பிலையை சேர்த்து சாப்பிடலாம்.

கறிவேப்பிலையில் மறைந்துள்ள நன்மைகள் என்னென்ன தெரியுமா? | Do You Know The Hidden Benefits Of Curry Leaves

பாதாம்

உடலில் கால்சியத்தை அதிகரிக்க பாதாமை உட்கொள்வது சிறந்த வழியாகும். 100 கிராம் பாதாமில் 264 மிகி கால்சியம் உள்ளது. அதோடு, இதில் வைட்டமின் ஈ, மக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்களும் உள்ளன. இவை அனைத்தும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. சிறந்த அளவில் கால்சியத்தைப் பெற பாதாமுடன், கறிவேப்பிலையை சேர்த்து சட்னி தயாரித்தோ அல்லது சாலட்டுகளின் மேல் தூவியோ உட்கொள்ளலாம்.

கறிவேப்பிலையில் மறைந்துள்ள நன்மைகள் என்னென்ன தெரியுமா? | Do You Know The Hidden Benefits Of Curry Leaves

முருங்கைக்கீரை

முருங்கைக்கீரையிலும் கால்சியம் அதிகம் உள்ளது. அதுவும் 100 கிராம் முருங்கைக்கீரையில் 440 மிகி கால்சியம் உள்ளது. சொல்லப்போனால் மற்ற உணவுகளை விட அதிகளவு கால்சியம் இந்த கீரையில் உள்ளது. இந்த கீரையை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், எலும்புகள் மற்றும் பற்கள் வலுவடைவதோடு, மூட்டுகளின் ஆரோக்கியம் மேம்படும் மற்றும் கால்சியம் குறைபாட்டினால் வரக்கூடிய ஆஸ்டியோபோரோசிஸை தடுக்கிறது. சிறந்த அளவில் கால்சியம் சத்தைப் பெற முருங்கைக்கீரையுடன் கறிவேப்பிலையை சேர்த்து சப்ஜி செய்தோ, பொரியலாகலோ சாப்பிடலாம்.

கறிவேப்பிலையில் மறைந்துள்ள நன்மைகள் என்னென்ன தெரியுமா? | Do You Know The Hidden Benefits Of Curry Leaves

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *