பலதும் பத்தும்

இந்த 5 அறிகுறிகள் இருக்கா? ; கல்லீரல் பத்திரம்

உடலில் குறிப்பிட்ட சில அறிகுறிகள் தெரிந்தால் அது எந்த நோயின் அடையாளம் என்பதை பதிவில் பார்க்கலாம்.

  கொழுப்பு கல்லீரல்

கொழுப்பு கல்லீரல் என்பது கல்லீரலில் சில கொழுப்புகள் சேரும் ஒரு பொதுவான நிலை. கல்லீரலில் உள்ள கொழுப்பின் சதவீதம் கல்லீரலின் மொத்த எடையில் 5 முதல் 10 சதவீதம் அதிகமாக இருந்தால், அது கொழுப்பு கல்லீரல் நோய் எனப்படும்.

இந்த நோய் சில சந்தர்ப்பங்களில் உயிருக்கு ஆபத்தாக மாறும். கொழுப்பு கல்லீரல் நோய் வயது வித்தியாசம் இன்றி வரும். இதில் முக்கிய கவனமாக இருக்க வேண்டியவர்கள் உடல் பருமன் அதிகரித்தவர்களும் நீரிழிவு நோயாளிகளும் தான்.

இந்த 5 அறிகுறிகள் இருக்கா? அப்போ உங்கள் கல்லீரல் பத்திரம் | 5 Symptoms Of Fatty Liver How To Find Out

இதில் நாம் மிக கவனமாக இருக்க வேண்டிய விடயம் என்னவென்றால் கொழுப்பு கல்லீரல் நோயின் ஆரம்பத்தில் இது எந்த அறிகுறிகளையும் காட்டாது.

பின்னர் சில அறிகுறிகள் காட்டும் போது அதை நாம் புறக்கணிக்க நேரிடும். அந்த அறிகுறிகளை புறக்கணிக்காமல் எப்படி கண்டறிந்து சிகிச்சை பெறுவது முக்கியம்.

இந்த 5 அறிகுறிகள் இருக்கா? அப்போ உங்கள் கல்லீரல் பத்திரம் | 5 Symptoms Of Fatty Liver How To Find Out

அறிகுறிகள்

  1. கல்லீரல் உடலின் சக்தி மையமாகும், கொழுப்பு கல்லீரல் நோய் இருந்தால் கல்லீரல் சரியாக செயற்படாது. அது சரியாக செயல்படாதபோது உங்கள் உடல் எப்போதும் சோர்வாக இருக்கும். இது ஒரு அறிகுறி.
  2. கல்லீரல் வயிற்றின் வலது பக்கத்தில், விலா எலும்புகளுக்குக் கீழே அமைந்துள்ளது. கல்லீரலில் கொழுப்பு சேரும்போது, ​​அது வீங்கி, லேசான வலி, அசௌகரியம் அல்லது அந்தப் பகுதியில் கனமான உணர்வு ஏற்பட்டால் அது கொழுப்பு கல்லீரலின் இரண்டாவது அறிகுறி.
  3.  கல்லீரல் சேதமடைந்தால், உடலில் பிலிரூபின் அளவு அதிகரிக்கிறது. இதனால் கண்கள் மற்றும் தோலின் வெள்ளைப் பகுதி மஞ்சள் நிறமாகத் தோன்றும், இது மஞ்சள் காமாலை எனப்படும் நிலை. இது கொழுப்பு கல்லீரல் நோய் முத்தி விட்டால் வரும் ஒரு அறிகுறி.
  4. இந்த நிலை மிகவும் மோசமாகிவிட்டால், வயிற்றில் திரவம் சேரத் தொடங்குகிறது, இதனால் வயிறு வீங்கி கர்பிணிகளுக்கு வயிறு இருப்பது போல முன்னே நீண்டு காணப்படும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *