பலதும் பத்தும்

French Riviera இன் வானத்தில் கோர்ஸ் தீவின் மலைப்பகுதி ; கண்டு களித்த சுற்றுலாவாசிகள்

பிரான்சின் தென் கிழக்கு கடற்கரை சுற்றுலாபகுதியான French Riviera இன் வானத்தில் கோர்ஸ் தீவின் மலைப்பகுதி தென்பட்டமை மக்களுக்கு பெரும் ஆச்சரிஅய்த்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக நீஸ் நகர கடற்கரையில் பதிவான மிக தெள்ளத்தெளிவான வானிலையால், பல மைல் தூரத்தில் இருந்த கோர்ஸ் தீவின் மலைப்பகுதி தென்பட்டது. இந்நிலையில் வெற்றுக்கண்களால் பார்க்கக்கூடியதாக இந்த வானம் பதிவானமை சுற்றுலாப்பயணிகளை அதிசயக்க வைத்தது.

இந்த நிகழ்வு அரிதான ஒன்று இல்லை என்றபோதும் பெப்ரவரி மாதத்தின் சில நாட்கள் மட்டுமே காணக்கூடியதாக இருக்கும் எனவும், கடந்த வருடம் நவம்பரில் அதிசயமாக மற்றொரு முறை தென்பட்டிருந்ததாகவும் பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்ச்சியான மழையினால் வளிமண்டலவியல் சுத்தப்படுத்தப்பட்டு வானம் தெளிந்தமையே இந்த கோர்ச் தீவு தெரிவரதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை கோர்ஸ் தீவுக்கும், நீஸ் கடற்கரைக்கும் இடைவெளி 200 கி.மீ கடல்கிலோமீற்றர் தூரம் எனவும் கூறப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *