இந்தியா

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு காலமானார்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தனது 101 ஆவது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக  (25) காலமானார்.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லக்கண்ணு கடந்த 20 தினங்களுக்கும் மேலாக உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில தினங்களாக நல்லக்கண்ணு உடல் நிலையில் பின்னடைவு இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நல்லக்கண்ணு (25) பகல் 1.55 மணிக்கு காலமானதாக வைத்தியசாலை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *