உலகம்

தீவிரமடையும் போர் பதற்றம் – ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இந்தியர்களுக்கு அறிவிப்பு

ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, கிடைக்கக்கூடிய எந்த வழிகளையும் பயன்படுத்தி ஈரானை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் அவசர கோரிக்கையை விடுத்துள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி ஐந்து மற்றும் பெப்ரவரி 14 ஆகிய திகதிகளில் இதேபோன்ற ஆலோசனைகள் வழங்கப்பட்ட பின்னணியில் இன்று புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

புதிய அறிவிப்பில், மாணவர்கள், யாத்ரீகர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைத்து இந்தியரும் வணிக விமானங்கள் அல்லது பிற போக்குவரத்து வழிகளை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அனைத்து இந்திய குடிமக்களும், இந்திய தகவல் தொடர்பு அதிகாரிகளும் உரிய எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளை தவிர்க்க வேண்டும்.

ஈரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும் மற்றும் ஏதேனும் முன்னேற்றங்கள் குறித்து உள்ளூர் ஊடகங்களைக் கண்காணிக்க வேண்டும்” என்று அந்த ஆலோசனையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் பயண ஆவணங்களை கையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *