உலகம்

மெக்சிகோவில் பெரும் பதற்றம் நிலை ; போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர் மரணமா?

மெக்சிகோவின் மிகவும் தேடப்படும் நபரான ‘ஜலிஸ்கோ நியூ ஜெனரேஷன்’ போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர் நெமேசியோ ஒஸ்குவேரா செர்வான்டெஸ் (எல் மெஞ்சோ), இராணுவத்தின் விசேட பாதுகாப்பு நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜலிஸ்கோ மாநிலத்தின் மத்திய-மேற்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முன்னெடுக்கப்பட்ட இந்தத் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டாலும், மெக்சிகோ அரசாங்கம் இதனை இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

இந்தத் தகவலைத் தொடர்ந்து ஜலிஸ்கோ உள்ளிட்ட பல பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய நபர்களின் நடமாட்டம் மற்றும் வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

15 மில்லியன் டொலர் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த, எல் மெஞ்சோ கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அங்குள்ள தனது நாட்டுப் பிரஜைகளை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

ஜலிஸ்கோவை மையமாகக் கொண்ட இந்த போதைப்பொருள் கும்பல் தற்போது மெக்சிகோ நாடு முழுவதும் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *