பலதும் பத்தும்

வாட்ஸ்அப் குழுக்களுக்கு புதிய அப்டேட்; இனி பழைய இரகசியங்கள் தெரியும்

வட்ஸ்அப்பில் குழுக்களில் புதிதாக இணையும் உறுப்பினர்கள், தாம் சேருவதற்கு முன் இடம்பெற்ற உரையாடல்களை அறிந்துகொள்ளும் வகையில் புதிய ‘Group Message History’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு புதிய உறுப்பினர் குழுவில் சேர்க்கப்படும் போது, முன்னதாகப் பரிமாறப்பட்ட 25 முதல் 100 செய்திகள் வரை அவருடன் பகிரும் வாய்ப்பு, குழுவில் உள்ள தற்போதைய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.

இந்த வசதி தானியங்கி முறையில் செயல்படாது. குழு உறுப்பினர்கள் விரும்பினால் மட்டுமே முந்தைய செய்திகளைப் பகிர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் Screenshots அனுப்புவது அல்லது பழைய செய்திகளை Forward செய்வது போன்ற சிரமங்கள் குறையும் என Meta நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டாலும், பயனர்களின் தனியுரிமைப் பாதுகாப்புகள் தொடர்ந்து பேணப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

‘Group Message History’ வசதி உலகம் முழுவதும் உள்ள பயனர்களுக்கு படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *