இலங்கை

டில்லியில் இன்று முக்கிய சந்திப்பு; அநுர – மோடி தீர்க்கமான பேச்சு!!

அரசுமுறைப் பயணமாக இந்தியா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான தீர்க்கமான இருதரப்புப் பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில், புதுடில்லியில் நடைபெற்று வரும் ‘செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில்’ (AI Impact 2026) பங்கேற்பதற்காக ஜனாதிபதி அங்கு சென்றுள்ளார். இந்த உச்சிமாநாட்டின் ஒரு அங்கமாகவே இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலின் போது, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளைப் புதிய தளத்திற்கு இட்டுச் செல்வது குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது. அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார பிணைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு குறித்தும் தலைவர்கள் கவனம் செலுத்தவுள்ளனர்.

குறிப்பாக, அண்மைய காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட பொருளாதார உடன்படிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால முதலீட்டுத் திட்டங்கள் குறித்து இதன்போது முக்கிய தீர்மானங்கள் எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியப் பிரதமருடனான இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று மாலை நாடு திரும்பவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *