உலகம்

லண்டனில் சிறுமிகளைக் குறிவைக்கும் கொடூர கும்பல்கள்; வெளியான பகீர் தகவல்

லண்டனில் 13 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளையும், பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இளம்பெண்களையும் குறிவைத்து, அவர்களைப் பாலியல் ரீதியாகவும் குற்றச் செயல்களுக்காகவும் பயன்படுத்தி வருவதாக பிபிசி குறிப்பிட்டுள்ளது.

தனிமையில் இருக்கும் அல்லது வறுமையில் வாடும் சிறுமிகளை இனங்கண்டு, அவர்கள் மீது அன்பு காட்டுவது போலவும், விலையுயர்ந்த பொருட்களை வாங்கிக்கொடுத்து அவர்களைத் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சித்திரவதை செய்கின்றன.

போதைப்பொருள் கடத்தல், ஆயுத வியாபாரம் மற்றும் அலைபேசித் திருட்டு போன்றவற்றில் சிறுமிகள் ஈடுபடுத்தப்படுகின்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கும்பல்களின் அதிகாரப் படி நிலையில் இவர்கள் மிகக் கீழ் மட்டத்தில் (Lowest Rung) வைக்கப்படுகின்றனர்.

குற்ற கும்பல்கள் வாங்கிய போதைப்பொருள் கடனுக்காக அல்லது கும்பல் தலைவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக இச்சிறுமிகள் பல ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். லண்டனில் வெள்ளை இனத்தவர் உட்பட பல்வேறு இனப் பின்னணியைக் கொண்ட குழுக்கள் இத்தகைய கொடூரங்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சில பெண்கள் தங்களைச் சுரண்டியமை வெள்ளை இன ஆண்கள் எனக் குறிப்பிட்டுள்ள நிலையில், மற்ற சில தப்பிப்பிழைத்தவர்கள் தாங்கள் தெற்காசிய ஆண்களால் பாலியல் தொழிலுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

லண்டன் காவல்துறையின் (Met Police) தகவலின்படி, தற்போது குறைந்தது 60 சிறுமிகள் இத்தகைய கும்பல்களால் சுரண்டப்படுவது அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சுமார் 2,000 சிறுவர் சுரண்டல் தொடர்பான வழக்குகள் பதிவாகின்றன.

இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள லண்டன் நகர முதல்வர் சாதிக் கான், இத்தகைய அருவருக்கத்தக்க கும்பல்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீதி பெற்றுத் தரப்படும் என்றும் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *