பலதும் பத்தும்

தொப்பையை குறைக்க இவ்வளவு சுலபமான வழிகள் இருக்கா !

ஆண்களுக்கு உருவாகும் தொப்பை தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.. பல ஆண்களும் அதை விரும்புவதில்லை.

தொப்பை வருவதை தடுக்க முடியும். அந்த வகையில் தொப்பையை குறைக்க சுலபமான சில வழிகளை பார்க்கலாம்:

நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் உள்ள கொழுப்புகள் உடலில் அதிக அளவில் சேரும்போது அது உடலின் வயிற்றுப் பகுதியில் தங்கிவிடும். அதைத்தான் தொப்பை என மருத்துவர்கள் சொல்கிறார்கள். இப்படி உடம்பில் அதிக அளவு கொழுப்பு சேர்ந்து தொப்பையாக மாறுவது உடம்பில் பல பிரச்சனைகளையும் உருவாக்கும்.

இரவு உணவில் இரண்டு விஷயங்களை பின்பற்ற வேண்டும் அதாவது, இரவு உணவை முடிந்த வரை ஏழு மணிக்குள் சாப்பிட்டு விட்டு 9:00 மணிக்கு தூங்க செல்லலாம்.. இரவு உணவுக்கு தூங்குவதற்கும் இடையில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் இடைவெளி இருந்தால் அது நல்லது. அதேபோல், பரோட்டோ போன்ற கடினமான உணவுகளை இரவில் தவிர்க்க வேண்டும்.

அதேபோல் இரவு உணவுக்கு பின் காலாற சிறிது தூரம் நடை பயிற்சி செய்யலாம் . ஜிம்மில் சென்று ஒர்க்அவுட் செய்ய முடியாது என்றால் வீட்டிலேயே சில எளிமையான உடற்பயிற்சிகளை தினமும் செய்யலாம்.. போன் பேசும் போது நடப்பது, எங்கேனும் சென்றால் லிப்ட்டை பயன்படுத்தாமல் படிக்கட்டுகளை பயன்படுத்துவது, வீட்டை சுத்தம் செய்வது போன்றவற்றை செய்யலாம்.

தூக்கத்துக்கும் தொப்பைக்கும் தொடர்பு உண்டு. சரியான நேரத்தில் சாப்பிட்டு சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் எழுபவர்களுக்கு உடலில் கொழுப்பு சேராது. அதேபோல் குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். தூங்கும் நேரம் குறைந்தால் உடலில் கொழுப்பு அதிகரித்து உடல் எடை அதிகரிக்கும்.

குறிப்பாக இரவில் 6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு உடலில் கொழுப்பு அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.. அரிசி போன்ற கார்போஹைட்ரேட் உணவுகளை குறைத்துக் கொண்டு நார்ச்சத்து, இரும்பு சத்து, புரோட்டின் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

குறிப்பாக நிறைய காய்கறிகள், பழங்கள், கீரைகள், நட்ஸ் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது.. அதேபோல் சமையலில் ஆலிவ் எண்ணெய், கடுகு எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

அதுவும் ஒரு குறிப்பிட்ட அளவுதான்.. நிறைய தண்ணீர் குடிப்பது, சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது, டீ, காபியை குறைப்பது, உணவில் உப்பை குறைப்பது ஆகியவவை நல்ல பலன்களை கொடுக்கும்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *