பலதும் பத்தும்

உலகளாவிய ரீதியில் திடீரென முடங்கிய யூடியூப்

உலகளாவிய ரீதியில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கியிருந்த யூடியூப் (YouTube) தளத்தின் செயற்பாடுகள் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சில மணிநேரங்களாகக் காணொளிகளைப் பார்ப்பதிலும், கணக்குகளை அணுகுவதிலும் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் தற்போது சீர் செய்யப்பட்டுள்ளன.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்தத் திடீர் முடக்கத்தால் ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதிக்குள்ளாகினர்.

உலகெங்கிலும் உள்ள பயனர்கள் எதிர்கொண்ட “சம்திங் வென்ட் ராங்” (Something went wrong) சிக்கல்கள் தற்போது நீக்கப்பட்டு, தளம் சீராக இயங்கத் தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *