அநுர அரசின் சரிவுக்கு அமைச்சர்களின் சிறுபிள்ளைத்தனமே பிரதான காரணம்!; சாடும் பிரசன்ன ரணதுங்க

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் அமைச்சரவையில் உள்ள பல அமைச்சர்கள் சிறுபிள்ளைத்தனமாகச் செயற்பட்டு வருகின்றனர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
அநுர அரசின் சரிவு ஆரம்பித்துவிட்டது. இதற்கு அமைச்சர்களின் செயற்றிறன் இன்மையே பிரதான காரணமாகும். அமைச்சரவையில் உள்ள பெரும்பாலானோர் பொறுப்புடன் செயற்படாமல், சிறுபிள்ளைத்தனமான போக்கைக் கடைப்பிடித்து வருகின்றனர்.
நாட்டின் முக்கிய தீர்மானங்களை எடுக்கும் இடங்களில் இருப்பவர்கள் இவ்வாறான முதிர்ச்சியற்ற தன்மையுடன் செயற்படுவது நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும்.
அரசின் நிர்வாகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பலவீனங்கள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாமைக்கு இந்த அமைச்சர்களின் அனுபவமின்மையே காரணம்.என்றார்.
![]()