உலகம்

Epstein Files ஐ லீக் பண்ணதே டிரம்ப் தான்!

Epstein Files ஐ லீக் பண்ணதே டிரம்ப் தான் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. எப்ஸ்டீன் பைல்ஸ் தொடர்பான செய்திகள் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்காவை சேர்ந்த எப்ஸ்டீன் இரண்டு தனி தீவுகளையே விலைக்கு வாங்கி அங்கே இளம் பெண்களையும், குறிப்பாக சிறுமிகளையும் அங்கு கொண்டு சென்று மிகப்பெரும் பணக்காரர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் விருந்தாக்கினார் என செய்திகள் வெளியாகி வருகிறது.

வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள்

ஒருபக்கம் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ், மறைந்த மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்ட பிரபலங்களும் எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்ததாக சொல்லி அது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி உலக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவையெல்லாம் 30 வருடங்களுக்கு முன்பு எடுத்தவை என தெரிகிறது. எப்ஸ்டீனை சந்தித்திருக்கிறேன்.. ஆனால், அவரது தீவுக்கெல்லாம் நான் சென்றதில்லை. அவருடன் பழகியதற்காக நான் வருத்தப்படுகிறேன் என பில்கேட்ஸ் விளக்கமளித்தார்.

ஆனால், அமெரிக்க அதிப டிரம்ப் அதற்கு சரியான விளக்கத்தை கொடுக்கவில்லை. இந்நிலையில் டிரம்பின் நிர்வாகம் எப்ஸீன் பைல்ஸ் கோப்புகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது என வெள்ளை மாளிகை விளக்கம் அளித்திருக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *