பலதும் பத்தும்

உலகில் 94 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கண்புரையால் அவதியுறுகின்றனர்

உலகில் 94 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கண்புரையால் அவதியுறுகின்றனர் என்றும் அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர்க்கு அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்கான வசதி இல்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தள்ளது.

விழித்திரையில் மேகமூட்டம் போல உருவாகும் கண்புரை, படிப்படியாக பார்வையை மங்கலாக்குகிறது. இதனை கவனிக்காமல் விட்டால் காலப்போக்கில் பார்வை இழப்பை அது ஏற்படுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

உலக மக்களில் முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப கண்புரை நோயும் அதிகரித்து வருகிறது. வயது மூப்புதான் கண்புரைக்கு முக்கிய காரணம் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *