உலகம்

பிரித்தானியாவின் சவுத்தாம்ப்டன் நகரில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் கைது

பிரித்தானியாவின் சவுத்தாம்ப்டன் நகரில் 19 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் 21 வயது இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹாம்ப்ஷயர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஐந்தாம் திகதி சவுத்தாம்ப்டன் நகர மையத்தின் பாலிகான் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இந்தக் குற்றம் குறித்து பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து விரைந்து செயல்பட்ட ஹாம்ப்ஷயர் பொலிஸ் அதிகாரிகள், சந்தேக நபரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர் வியான் சுரேந்திரநாதன் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் வகுப்பு ‘ஏ’ போதைப்பொருள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *