உலகம்

தனது விந்தணுக்களால் ஒரே நேரத்தில் 20 பெண்களை தாயாக்க விரும்பிய எப்ஸ்டீன்; மற்றுமொரு பகீர் தகவல்

ஒரே நேரத்தில் 20 பெண்கள் பண்ணை வீட்டில், தனது விந்தணுக்களால் பெண்களுக்கு கருவூட்டி அதன்மூலம் ஒரு சூப்பர் இனத்தை உருவாக்க உயிரிழந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் திட்டமிட்டதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அரச குடும்பத்தினர் மற்றும் பிரபலங்கள் என உலகின் செல்வாக்குமிக்க மனிதர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன், 2019ஆம் ஆண்டில், சிறுமிகளைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

தனது விந்தணுக்களால் ஒரே நேரத்தில் 20 பெண்களை தாயாக்க விரும்பிய எப்ஸ்டீன்; மற்றுமொரு பகீர் தகவல் | Epstein Impregnate 20 Women Create Super Race

சிறுமிகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக   குற்றம்

தனது செல்வாக்கையும் பணத்தையும் பயன்படுத்தி சிறுமிகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக அவர்மீது குற்றம்சாட்டப்பட்டது.

ஆனால், அவர் கைது செய்யப்பட்ட சில வாரங்களிலேயே, நியூயார்க் சிறையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தற்கொலை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், அவரது மரணம் உலகளவில் பல மர்மங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பியது.

கடந்த பல ஆண்டுகளாக, அமெரிக்க புலனாய்வாளர்கள் எப்ஸ்டீன் தொடர்பான மின்னஞ்சல்கள், தொடர்புப் பட்டியல்கள், விமானப் பயணப் பதிவுகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் எனப் பெருமளவிலான தரவுகளைச் சேகரித்தனர்.

இவைதான் இப்போது, ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ என்று அழைக்கப்படுகின்றன. சமீபத்தில், அமெரிக்க நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த ஆவணங்களின் புதிய தொகுப்பு பொதுவெளியில் வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த செல்வாக்குமிக்க நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இது, உலகளவில் புயலைக் கிளப்பி வருகிறது.

இந்த நிலையில் எப்ஸ்டீன், மெக்ஸிகோவின் சாண்டா ஃபே அருகே உள்ள பண்ணை வீட்டில், தனது விந்தணுக்களால் பெண்களுக்கு கருவூட்டி அதன்மூலம் ஒரு சூப்பர் இனத்தை உருவாக்க விரும்புவதாக கூட்டாளிகளிடம் அவர் கூறியதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த யோசனையை, சிலர் தனிப்பட்ட முறையில் ’குழந்தைப் பண்ணை’ என்று குறிப்பிட்டதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

நாசா விஞ்ஞானியாக பணிபுரிந்ததாகக் கூறும் ஒரு பெண், எப்ஸ்டீன் தனது பண்ணையில் ஒரே நேரத்தில் 20 பெண்கள் கர்ப்பமாக இருக்க வேண்டும் என்று விரும்பினார் என்று கூறினார். எனினும், அத்தகைய திட்டம் ஒருபோதும் செயல்படுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்கின்றனர், ஆய்வாளர்கள்.   

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *