இலங்கை

அவர் வருவாரா? இல்லையா?; தொலைபேசி மூலம் பஷிலிடம் கேளுங்கள்

பஸில் ராஜபக்‌ஷ வருவார் என்று பார்த்துக்கொண்டிருக்காமல் அவர் வருவாரா? இல்லையா? என்று அவரிடம் தொலைபேசியிலேயே அரசாங்கத்தில் உள்ளவர்கள் கேட்கலாம் என்றும், 2005இல் பஸிலுடன் இருந்தவர்களே இப்போது ஆட்சியில் இருக்கின்றனர் என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பஸில் ராஜபக்‌ஷ தொடர்பான வழக்குகள் தொடர்பில் அரசாங்க தரப்பில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து கூறுகையிலேயே நாமல் ராஜபக்‌ஷ இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இவர்கள் அனைவரும் பஸில் ராஜபக்ஷவுடன் தொடர்புடையவர்களே. 2005இல் ஒன்றாகவே தேர்தலில் இருந்தனர். அவர் வருவாரா? இல்லையா? என்று தொலைபேசி அழைப்பெடுத்து இவர்களுக்கு கேட்க முடியும்தானே. 2015இல் ஊழல் மோசடி குழுவில் இருந்துகொண்டு குறித்த வழக்கை தாக்கல் செய்தனர். ஆனால் இன்னும் அந்த வழக்கு நடக்கின்றது. நான் வருகின்றேன். வேண்டுமென்றால் தங்கத்தில் சங்கிலி போட்டதாக கூறப்படும் நாயையும் அழைத்துகொண்டு வருகின்றேன்.

பிக் பொக்கட் அடிப்பவர்கள் மற்றையவர்கள் பின்னால் அதோ திருடன் என்று ஓடுவது போன்றுதான் அரசாங்கமும் நடந்துகொள்கின்றது. நிலக்கரியில் கொள்ளையடித்தல், கெப் வாகனத்தில் பணத்தை வீணடித்து மற்றையவர்களை திருடர் என்கிறது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *