உலகம்

எப்ஸ்டீன் கோப்பில் 169 முறை பெயர் ; ஒருநாளும் நான் சந்தித்ததில்லை; மறுக்கும் தலாய்லாமா

அமெரிக்க நீதித்துறை எப்ஸ்டீன் தொடர்பான சுமார் 30 லட்சம் பக்க ஆவணங்கள், 2,000 வீடியோக்கள் மற்றும் 1.8 லட்சம் படங்களை வெளியிட்டது.

இதில் உலகின் பல செல்வாக்குமிக்க மனிதர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தொழிலதிபர்கள் பில் கேட்ஸ், எலான் மஸ்க், அனில் அம்பானி, பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் திபெத்திய மதகுரு தலாய் லாமா உள்ளிட்டோரின் பெயர்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், எப்ஸ்டீன் ஃபைல்ஸ் விவகாரத்தில், தனது பெயரை தொடர்புப்படுத்தி வெளியாகும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என திபெத்திய மதகுரு தலாய் லாமா மறுத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான கோப்பில் 169 முறை தலாய் லாமாவின் பெயர் இடம்பெற்றிருந்த நிலையில், அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனை ஒருநாளும் தலாய் லாமா சந்தித்ததில்லை என அவரது அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *