உலகம்

ரஷ்யா-உக்ரைன் போரில் 55,000 வீரர்கள் பலி

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் 4 ஆண்டுகளைக் கடந்து நடந்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் ரஷ்யாவுக்கு எதிரான போரில் சுமார் 55,000 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையிலான போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் போர் நிறுத்தத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

2022-ம் ஆண்டு தொடங்கிய இந்தப் போரில் இருதரப்பிலும் சுமார் 5 லட்சம் பேர் பலியானதாகவும், சுமார் 15 லட்சம் பேர் காயமடைந்தனர் என கூறப்படுகிறது.

இந்தப் போரில் ரஷ்யா சார்பில் 3.25 லட்சம் பேரும், உக்ரைன் சார்பில் 1.4 லட்சம் பேரும் உயிரிழந்து இருக்கலாம் என சர்வதேச ஆய்வுகள் மையத்தின் அறிக்கை கூறுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *