உலகம்
நைஜீரியாவில் தாக்குதல்களில் 191 பேரைக் கொன்ற துப்பாக்கிதாரிகள்

மத்திய, வட நைஜீரியாவின் ஒதுக்குப்புற கிராமங்களில் இடம்பெற்ற வெவ்வேறான தாக்குதல்களில் 191 பேரை ஆயுதந் தரித்தோர் கொன்றதாக உள்ளூர் மக்கள் பிரதிநிதி, அங்குள்ளோர், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மத்தியா கவரா மாநிலத்தில் வொரொ சமூகத்தை செவ்வாய்க்கிழமை (03) துப்பாக்கிதாரிகள் தாக்கியதாகவும், குறைந்தது 170 பேர் கொல்லப்பட்டதாக அப்பகுதி மக்கள் பிரதிநிதி கூறியுள்ளார்.
இஸ்லாமிய ஆயுததாரிகள் என நம்பப்பரும் துப்பாக்கிதாரிகள், நைஜீரிய அரசுக்கான ஆதரவைக் கைவிட்டு ஷரியா இஸ்லாமியச் சட்டத்துக்கு மாறுமாறு உள்ளூரில் இருப்போரை வலியுறுத்துவதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வடக்கு கட்சியா மாநிலையில் குறைந்தது 21 பேரை துப்பாக்கிதாரிகள் கொன்றதாக அங்குள்ளோர், உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
![]()