இலங்கை

அநுர அரசின் இனவாதமற்ற பயணத்துக்கு வாசு பாராட்டு!

“இனவாதம் அற்ற பயணத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆரம்பித்திருப்பதே சிறப்பான ஆரம்பமாகும்.”

இவ்வாறு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார Vasudeva Nanayakkara தெரிவித்தார்.

“ இனவாதம் மற்றும் மதவாதத்துக்கு இடமில்லை என ஜனாதிபதி
திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அவரின் அந்த எதிர்பார்ப்பு நிறைவேற
வேண்டும்.

ஏனைய அரசுகளுடன் ஒப்பிடுகையில் இது மாறுபட்ட அரசாகும். பிரபு வர்க்கத்தினர் அல்ல. சாதாரண மக்களே ஆட்சியில் உள்ளனர். எனவே, ஏற்பட்ட மாற்றத்தை சிறந்த மாற்றமாக மாற்றுவதற்கு ஒன்றிணைவோம்.” எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *