பலதும் பத்தும்

பனிப் பொழிவில் கிரிக்கெட் விளையாடும் ராணுவ வீரர்கள்; மெய்மறந்து ஆரவாரமாக கழித்த பொழுதுகள்!

பனிக் கட்டியில் ,ராணுவ வீரர்கள் உற்சாகத்துடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ராணுவ வீரர்கள் கடுமையான சூழ்நிலைகளிலும் தமது ஓய்வு நேரத்தினை கழிக்க விளையாடி மகிழ்கின்றனர்.

குறித்த காணொளியில் ராணுவ வீரர்கள் ஒன்றிணைந்து மகிழ்வாக ஆராவரித்து கிரிக்கெட் விளையாடுகின்றனர்.

பனிப்பொழிவில் பேட்டிங், அற்புதமான கேட்ச், கொண்டாட்டங்கள் என அனைத்து அழகிய தருணங்களும் காட்சிகளாக காணொளியில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

தொலைதூர எல்லைப் பகுதிகளில் இத்தகைய விளையாட்டு நடவடிக்கைகள், நீடித்த குளிர்காலங்களில் வீரர்களின் மன உறுதி மற்றும் நல்வாழ்வை மேம்படுத்த உதவுகின்றன.

குறித்த காணொளியை இணையத்தில் அனைவரும் பகிர்ந்து வருகின்றனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button