பீட்சாவுக்கு ஆசைப்பட்டு ஏமாந்த அமைச்சர்

பீட்சாவுக்கு ஆசைப்பட்டு அமைச்சர் ஒருவர் முட்டாளாகி உள்ளார்.பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப்பே இவ்வாறு முட்டாளாக்கப்பட்டுள்ளார்.
பிரபலமான ‛பீட்சா ஹட்’ நிறுவனத்தின் கிளை என்று கூறி அவரை தொழிலதிபர்கள் ஏமாற்றி போலியான கிளையை திறக்க வைத்துள்ளனர். இதுதொடர்பான போட்டோ, வீடியோக்கள், ‛பீட்சா ஹட்’ நிறுவனத்தின் விளக்கம் வெளியான நிலையில் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப்பை பலரும் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்..
பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப்பை அங்குள்ள தொழிலதிபர்கள் முட்டாளாக்கி உள்ளனர்.
அதோடு ‛பீட்சா’வுக்கு ஆசைப்பட்டு சென்ற பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் ஏமாந்துள்ளார். அதாவது கிஸ்தானின் சியால்கோட் கண்டோன்மென்ட் பகுதியில் புதிதாக பீட்சா விற்பனை கடை திறக்கப்பட்டது.
இந்த கடை ‛பீட்சா ஹட்’ என்ற பிரபல நிறுவனத்தின் கிளை என்று விளம்பரம் செய்யப்பட்டது. கடையின் முன்பகுதியில் ‛பீட்சா ஹட்’ நிறுவனத்தின் பெயர் இடம்பெற்றிருந்தது. இந்த புதிய பீட்சா கடையை பாகிஸ்தானின் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் திறந்து வைத்தார். அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதுதொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வெளியானது. இதனை ‛பீட்சா ஹட்’ நிறுவனமும் கவனித்தது. அப்போது தான் ‛பீட்சா ஹட்’ நிறுவனம் தனது புதிய கிளை எதையும் சியால்கோட் கண்டோன்மென்ட் பகுதியில் திறக்காததை அறிந்தது. மேலும் யாரோ ஒருவர் அவர்களின் பெயரில் போலியாக கிளையை உருவாக்கி பாகிஸ்தானின் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப்பை வைத்து திறந்து விளம்பரம் தேடியதும் தெரியவந்தது.
![]()