இலங்கை

திருகோணமலை புத்தர் சிலை வழக்கு; பலாங்கொடை கஸ்ஸப தேரர் உட்பட 04 பிக்குகளுக்கு விளக்கமறியல்!

திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை குறித்த சம்பவம் தொடர்பாக பலாங்கொடை கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பிக்குகள் மற்றும் ஐந்து பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலையில் உள்ள ஒரு விகாரையில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையை அகற்ற முயற்சித்ததைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி அமைதியின்மை ஏற்பட்டது.

எனினும், குறித்த கட்டுமானங்கள் அனுமதி இன்றி முன்னெடுக்கப்பட்டதாகக் கூறி, கடற்கரை பாதுகாப்புத் திணைக்களம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தது.

இந்த நிலையில், புத்தர் சிலையை அகற்ற முயற்சித்த போது, பிக்குகள் மற்றும் பிரதேச மக்களிடமிருந்து பொலிஸாருக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பான வழக்கு திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சம்பந்தப்பட்ட தரப்பினர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, குறித்த குழுவினரை ஜனவரி மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை போதிராஜ விகாரையில் புத்தர் சிலையை வைத்ததன் மூலம் கடலோர பாதுகாப்பு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *