இலங்கை

ஐ.தே.க. – ஐ.ம.ச. கூட்டணி உடன்பாடு உறுதியானது; மத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளராக நவீன்

எதிர் வரும் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டணியின் மத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளராக நவீன் திசாநாயக்க போட்டியிடவுள்ளார்.

இது தொடர்பில் கண்டியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் கண்டி மாவட்டத் தலைவருமான நவீன் திசாநாயக்கா தெரிவிக்கையில்,

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கான ஐக்கிய தேசிய கட்சி-ஐக்கிய மக்கள் சக்தி என்பவற்றின் கூட்டணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன, மேலும் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கான கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக மத்திய மாகாணத்தில் போட்டியிட நான் தயாராக உள்ளேன் .

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கான ஒன்பது மாகாணங்களையும் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பிற அரசியல் கட்சிகளுக்கு இடையில் வேட்பாளர் பங்கீடுகள் தொடா்பாக இறுதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைப்புக்கான அனைத்து உடன்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன .அந்த இணைப்பின் மூலம் எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் எ மது முன்னணி எளிதாக வெற்றி பெறும்.கடந்த காலங்களில் செய்யப்பட்ட தவறுகளை ஐக்கிய தேசியக் கட்சி சரிசெய்து, வரவிருக்கும் தேர்தல்களில் வெற்றி பெற்று, மக்களுக்காக வெற்றிகரமான அரசியல் பயணத்தை மேற்கொள்ளும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *