போண்டி கடற்கரை துப்பாக்கிச் சூடு; ஆஸ்திரேலிய அரசு அதிரடி விசாரணை

சிட்னியின் போண்டி (Bondi) கடற்கரையில் கடந்த மாதம் யூத
பண்டிகையின் போது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் குறித்து,
நாட்டின் உயரிய அதிகாரமிக்க ‘ரோயல் கமிஷன்’ (Royal Commission)
விசாரணைக்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸி (Anthony
Albanese) உத்தரவிட்டுள்ளார்.
15 பேர் கொல்லப்பட்ட இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து, மக்கள்
மற்றும் யூத அமைப்புகளின் கடும் அழுத்தத்திற்குப் பிறகு இந்த
முடிவை அவர் எடுத்துள்ளார்.
முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி வர்ஜீனியா பெல் ( Virginia Bell)
தலைமையில் அமையவுள்ள இந்த ஆணையம், நாட்டில் வளர்ந்து வரும் யூத
எதிர்ப்பு உணர்வுகள் மற்றும் இந்தத் தாக்குதலுக்கான பின்னணி
குறித்து விரிவாக விசாரிக்கும்.
இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இதன் இறுதி அறிக்கை
சமர்ப்பிக்கப்பட வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
சமூக ஒற்றுமையை நிலைநாட்டவும், இதுபோன்ற தீவிரவாதச் செயல்களைத்
தடுக்கவும் இந்த விசாரணை மிக அவசியம் என்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
![]()