இந்தியா
புரட்சிக் கலைஞருக்கு புகழஞ்சலி செலுத்திய த.வெ.க. தலைவர் விஜய்!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் அவரை வணங்குகிறேன். புரட்சிக் கலைஞருக்கு என் புகழஞ்சலி என குறிப்பிட்டுள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் சினிமா துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
![]()