உலகிலுள்ள 217 நாடுகளின் நாணயத்தாள் சேகரிப்பு!

உலகிலுள்ள 217 நாடுகளின் நாணயத்தாள் சேகரிப்பை வெளிப்படுத்தும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
குறித்த காணொளியில், 21 வயதான இந்திய MBBS மாணவர் வேதாந்த் மிஸ்ரா, அமெரிக்க டாலர், யூரோ, இந்தியா ரூபாய் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நாணயத்தாள்களை வண்ணமயமான குவியல்களாக காட்சிப்படுத்துகிறார்.
ஒவ்வொரு நாட்டின் நாணயத்தாள்களும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் நிறங்களுடன் காணப்படுவது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இக் காணொளி இணையத்தில் பரவியதையடுத்து, பல நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்கள் தங்கள் நாட்டின் நாணயங்களை அடையாளம் கண்டு மகிழ்ச்சியுடன் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இதனால் இந்த பதிவு உலகளாவிய பங்கேற்புடன் பல்வேறுபட்ட மக்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
முத்திரை சேகரிப்பு போன்ற பொழுதுபோக்குகள் மக்கள் மத்தியில் விருப்பத்திற்குரியதாக இருந்தாலும், இவ்வாறு உலக நாணயங்களைச் சேகரிப்பதும் சிலருக்கு தனித்துவமான மற்றும் விரும்பத்தக்க பொழுதுபோக்காகவும் உள்ளது.
பல நாடுகளின் நாணயத்தாள், அந்தந்த நாட்டின் கலாச்சாரம், வரலாறு மற்றும் பாரம்பரியத்தை எவ்வாறு பிரதிபலிக்கின்றன .
குறித்த காணொளியை இளைஞரின் செயலை பலரும் பாராட்டி இணையத்தில் ஆச்சரியத்துடனும் பகிர்ந்து வருகின்றனர்.
![]()