முச்சந்தி

குருநாகலில் மூன்று மண்சரிவு 9 பேர் பலி, 24 பேரை காணவில்லை

குருநாகல் மாவட்டத்தில் மூன்று இடங்களில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் சந்தன திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த மண்சரிவுகளில் சிக்கி 24 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

குருநாகல் இதுல்கொட மலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 12 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இப்பாகமுவ மற்றும் அரகமங்கந்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் பல வீடுகள் புதையுண்டுள்ளதாகவும், 8 பேர் காணாமல் போயுள்ளதாகவும் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஓமரகொல்ல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 13 பேர் காணாமல் போயுள்ளதுடன் அவர்களில் நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக குருநாகல் மாவட்ட செயலாளர் சந்தன திசாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *