பலதும் பத்தும்

32 பில்லியன் ரூபா இலாபம் ஈட்டிய கொழும்பு துறைமுகம்!

2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் கொழும்பு துறைமுகம் ரூ. 32.2 பில்லியன் நிகர இலாபத்தை பதிவு செய்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில் கொழும்பு துறைமுகம் குறித்த காலக் கட்டத்தில் ஈட்டிய நிகர லாபம் ரூ. 18.9 பில்லியனாக இருந்தது.

இது ஆண்டுக்கு ஆண்டு சுமார் 13 பில்லியன் ரூபா அதிகரிப்பை வெளறிக்காட்டுகிறது.

இது 71% வளர்ச்சி விகிதத்தை பிரதிபலிக்கிறது.

தொடர்ச்சியான மேம்பாட்டுத் திட்டங்கள், மேம்பட்ட சேவை செயல்திறன் ஆகியவற்றின் விளைவாக, கொள்கலன் கையாளுதல் 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது சுமார் 6% வளர்ச்சியைக் காட்டியுள்ளது.

கிழக்கு முனையம் மற்றும் ஜெயா கொள்கலன் முனையம் போன்ற உள்கட்டமைப்புகள் நிறைவடைந்தவுடன், மேலும் திறன் விரிவாக்கம் எதிர்பார்க்கப்படுகிறது என்று இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தை ஒரு பிராந்திய பரிமாற்றல் மையமாக நிலைநிறுத்துவதற்கான எதிர்கால திட்டங்களை செயல்படுத்துவதில் இந்த இலாபங்கள் பயன்படுத்தப்படும் என்றும் அதிகார சபை கூறியது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button