இலங்கை

மன்னாரில் காற்றாலை, கனிய மணல் அகழ்வு; இன்று ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம்

மன்னாரில் அமைக்கப்படும் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக நேற்று வியாழக்கிழமை 47 ஆவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில்,இன்று வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில் ஜனாதிபதி செயலகம் முன்பாக பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு களுக்கு எதிராக மன்னாரில் முன்னெடுக்கப்படடு வருகின்ற போராட்டம் வியாழக்கிழமையுடன் 47 ஆவது நாட்களை கடந்துள்ளது.

– மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன் பிற்பகல் 2 மணி அளவில் முன்னெடுக்கப்படவுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் இருந்து பல நூற்றுக்கணக்கான மக்கள் தமது கிராமங்களில் இருந்து கலந்து கொள்ளவுள்ளனர்.

எனவே மக்களின் பிரச்சினைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகளை முன் வைத்து குறித்த போராட்டம் கடந்த 47 நாட்களாக மன்னாரில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.எனினும் அரசாங்கத்தால் இதுவரை எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை.இந்நிலையில் குறித்த கோரிக்கைகளை முன் வைத்து இன்று வெள்ளிக்கிழமை மாலை ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம் இடம்பெற உள்ளது.

குறித்த போராட்டத்தில் தென் பகுதியில் உள்ள சிங்கள சகோதரர்களும்,மதத் தலைவர்களும் இணைந்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.எனவே குறித்த போராட்டத்தில் புத்திஜீவிகள்,மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள்,ஊடகவியலாளர்கள் உள்ளடங்களாக அனைத்து தரப்பினரும் இணைந்து ஆதரவை வழங்க முன்வந்துள்ளனர்.

தேசத்தின் குரலாக இன்று வெள்ளிக்கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்திற்கு முன் எமது குரல் ஒலிக்கும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *