இந்தியா

“அணு ஆயுத மிரட்டலை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம்” – சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி

“இந்திய ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது. எந்த மிரட்டலுக்கும் நாம் அடிபணிய மாட்டோம்” என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறினார்.

இந்தியா முழு​வதும் 79-வது சுதந்​திர தினம் இன்று கோலாகல​மாக கொண்​டாடப்பட்டுவருகிறது.
தலைநகர் டெல்​லி​யில் அமைந்​துள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்​திர மோடி தேசிய கொடியேற்றினார்.

தொடர்ந்து 12-வது முறையாக செங்​கோட்​டை​யில் தேசிய கொடியை அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில்,

“ நாம் அனைவரும் இந்தியாவை நம் உயிருக்கும் மேலாக நேசிக்கிறோம். 1947-ம் ஆண்டு, எல்லையற்ற சாத்தியக்கூறுகளுடனும், எண்ணற்ற ஆயுதங்களின் வலிமையுடனும், நமது நாடு சுதந்திரம் பெற்றது. ஆனால் சவால்கள் இன்னும் அதிகமாக இருந்தன.

இந்த சுதந்திர தினத்துக்காக செங்கோட்டையில் கூடியிருக்கும் ‘மினி இந்தியா’வை நான் காண்கிறேன். நமது துணிச்சலான வீரர்களின் வீரத்துக்கு நான் தலை வணங்குகிறேன்.” என்று குறிப்பிட்டார்.

ஆபரேஷன் சிந்தூர் மூலம், நமது வீரர்கள், எதிரிகளை கற்பனைக்கு அப்பாற்பட்ட பலத்துடன் பதிலளித்தனர். ஏப்ரல் 22-ம் திகதி. எல்லை தாண்டி வந்த பயங்கரவாதிகள், அப்பாவி பொதுமக்களை அவர்களின் மதத்தை கேட்ட பிறகு கொன்றனர்.
இதனால் முழு தேசமும் கோபமடைந்தது.

அணு ஆயுத மிரட்டல் நீண்ட காலமாகத் தொடர்கிறது. ஆனால், அது இனி பொறுத்துக் கொள்ளப்படாது. நமது எதிரிகள் இதுபோன்ற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டால், நமது ஆயுதப் படைகள் தங்கள் விருப்பப்படி, அவர்கள் விரும்பும் நேரத்தில், அவர்கள் நிர்ணயித்த இலக்குகளை அடைவதன் மூலம் பதிலடி கொடுக்கும். பொருத்தமான பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

நமது ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு நாளும் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது. எந்த மிரட்டலுக்கும் நாம் அடிபணிய மாட்டோம்.” – என பிரதமர் மோடி மேலும் குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *