பலதும் பத்தும்

நிலவை முதன்முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர் மரணம்

நிலவை முதன்முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர்களில் ஒருவரான, ஸ்மிலின் ஜிம் லவெல் (Jim Lovell) (வயது 97) காலமானார். நாசா விண்வெளி மையத்தின் மூத்த விண்வெளி வீரரான ஸ்மிலின் ஜிம் லவெல் , அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் காலமானார்.

இதனை நாசா நிர்வாகி மற்றும் போக்குவரத்து செயலாளரான சீன் டப்பி உறுதி செய்துள்ளார். 1968-ம் ஆண்டு விண்வெளி பயணம் மேற்கொண்ட அப்பல்லோ 8 விண்கல பயணத்தில், ஜிம் (Jim Lovell) தலைமையில் நாசா வீரர்கள் பிராங்க் போர்மன் 2 மற்றும் வில்லியம் ஆண்டர்ஸ் ஆகியோர் சென்றனர்.

நாசா விண்வெளி மையம் வருத்தம்

புவியின் ஈர்ப்பு விசையை கடந்து, மனிதர்கள் முதன்முறையாக விண்வெளிக்கு மேற்கொண்ட பயணம் என்ற வகையில் அது வரலாறு படைத்தது. வீரர்கள் பூமிக்கு திரும்புவதற்கு முன் 10 முறை நிலவை சுற்றி வந்தனர்.

இந்த பயணத்தில், உயிருடன் இருந்த கடைசி நபராக லவெல் (Jim Lovell) அறியப்பட்டார். இதன்பின்னர், 1970-ம் ஆண்டு நிலவில் தரையிறங்கும் பயணத்தின்போது, அப்பல்லோ 13 விண்கலத்தின் ஆக்சிஜன் தொட்டி திடீரென விண்வெளியில் வெடித்ததனால், விண்கலத்தில் இருந்த அனைவரும் ஆபத்தில் தள்ளப்பட்டனர்.

அதில் பயணித்த ஜிம் லவெல்(Jim Lovell) மற்றும், அவருடைய இரு சக வீரர்களான ஜான் ஸ்விகெர்ட் ஜூனியர் மற்றும் பிரெட் ஹெய்ஸ் ஜூனியர் ஆகியோர் உயிருடன் பூமிக்கு திரும்புவார்களா? என்பதில் சந்தேகம் எழுந்தது.

எனினும் அந்த ஆபத்தான நிலையிலும் அமைதியான முறையில் செயல்பட்டு, அந்த விண்கலம் பூமிக்கு திரும்புவதற்கு கமாண்டர் என்ற அளவில் உதவி புரிந்த ஜிம்முக்கு (Jim Lovell) பாராட்டுகள் குவிந்தன.

அதுமட்டுமல்லாது அதுவே அவருடைய கடைசி விண்வெளி பயணமும் ஆகும். அவருடைய (Jim Lovell) மறைவுக்கு நாசா விண்வெளி மையம் வருத்தம் தெரிவித்து உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button