இலங்கை

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி; முன்னாள் எம்.பி.க்களின் பிள்ளைகளுக்கு 195,7 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கலாநிதிப்பட்டம் அல்லது பிற உயர் கல்வியை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதி நிதியத்தில் இருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு 2005 ஆம் ஆண்டு முதல் 2014 வரை 195,7 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது என பிரதி அமைச்சர் அருண கருணாதிலக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் அரச தரப்பு எம்.பி. சவீந்திர பண்டார எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பதிலளிக்கையில்,

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கலாநிதிப்பட்டம் அல்லது பிற உயர் கல்வியை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதி நிதியத்தில் இருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2014 வரை 195,7 மில்லியன் (195 747 480.61) ரூபா வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு நிதி வழங்கப்பட்டுள்ளவர்களின் பட்டியலை சபைப்படுத்துவதுடன் ஒருசிலரின் பெயர் விபரங்களை மாத்திரம் தெரிந்துகொள்வதற்காக தெரிவிக்கிறேன்.

அந்த வகையில், 2005ஆம் ஆண்டு கம்பஹா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத்சந்திர ராஜகருணா அவரின் பிள்ளையான ஹர்ஷண சபுன் ராஜகருணாவுக்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து புலமைப்பரிசிலாக 5 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. 2006 இல் கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கருணாசேன கொடித் துவக்கு அவரின் பிள்ளை அல்லது உறவினரான ஐ.என். கொடிதுவக்குவுக்கு 12 இலட்சம் ரூபா வழங்கப்பட்டிருக்கிறது.

அதே ஆண்டில் முன்னாள் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பி இராதாகிருஷ்ணன் அவரின் பிள்ளை அல்லது உறிவினர் திருமதி கே, இராதாகிருஷ்ணனுக்கு 8இலட்சத்தி 300 6ரூபாவும் , பிறிதொருதடவை 3இலட்சத்தி 96ஆயிரத்தி 994 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு புலமைப்பரிசில் பெற்று வெளிநாடுகளில் கலாநிதி பட்டம் பெற்றவர்கள் மீண்டும் நாடு திரும்பியோர், திரும்பாதோர் தொடர்பான தகவல்கள் இல்லை. என்றாலும் இதுதொடர்பாக எதிர்காலத்தில் தேடிப்பார்த்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமாக இருந்தால் நிச்சயம் எடுப்போம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *