இந்தியா
ரஷ்ய எண்ணெய் இறக்குமதிகளை பேணவுள்ள இந்தியா

தண்டம் விதிக்கப்படுமென்ற ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ரஷ்யாவிடமிருந்து இந்தியா தொடர்ந்தும் எண்ணெய்யை வாங்குமென இந்திய அரசாங்கத் தகவல் மூலங்கள் தெரிவித்ததாக றொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய ஏற்றுமதிகளுக்கான புதிய 25 சதவீத வரிக்கு மேலதிகமாக ரஷ்ய ஆயுதங்கள் மற்றும் எண்ணெய்யை வாங்குவதற்கான மேலதிகமான தண்டத்தை இந்தியா எதிர்கொள்ளுமென ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
![]()