பலதும் பத்தும்

வெள்ளை மாளிகையில் 200 மில்லியன் டாலர் செலவில் பால்ரூம்

அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ வசிப்பிடமான வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதியில் 200 மில்லியன் டாலர் மதிப்பில் பால்ரூம் கட்டப்பட உள்ளது.

வெள்ளை மாளிகையில் பொழுதுபோக்குக்காக பெரிய அளவிலான நடன அரங்கம் இல்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில், 90 ஆயிரம் சதுர அடியில் 650 பேர் அமரக்கூடிய வகையில் இந்தப் பால்ரூம் கட்டப்பட உள்ளது.

கட்டுமானப் பணி செப்டம்பரில் தொடங்க உள்ளது என்றும், வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதியில் வசிக்கும் அதிபரின் மனைவி மெலனியா மற்றும் அவரது உதவியாளர்கள், ஊழியர்கள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார்.

இந்த பால்ரூம் கட்டுமானத்துக்கான முழு பணத்தையும் டிரம்ப் மற்றும் பிற நன்கொடையாளர்கள் செலுத்துவார்கள் எனவும் தெரிவித்த கரோலின் லீவிட், பால்ரூம் வரைபடங்களை வெளியிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button