இலங்கை

முன்னாள் அமைச்சர்கள் இருக்கும் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 6 தொலைபேசிகள் கண்டுபிடிப்பு!

வெலிக்கடை சிறைச்சாலையின் அறை பகுதிகளில் இருந்து ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய சிறைச்சாலை அவசரகால பதிலளிப்பு குழுவினரால் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் ஆறு கையடக்கத் தொலைபேசிகளும் மேலும் சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்ட அறை பகுதிகளிலேயே சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளான பல முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ, எம்.எஸ். ரஞ்சித் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கைதிகள் தங்கியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *