நாட்டை ஆட்சி செய்யும் இரகசிய நபர்கள் யார்?; சம்பிக்க வெளியிடும் புதிய தகவல்

மக்களுக்கு தெரியாத, தேர்தல்கள் ஆணைக்குழுவே அறியாத இரகசியமான நபர்களே ஜே.வி.பி என்ற பெயரின் கீழ் இந்த நாட்டை நடத்திச் செல்கின்றனர் என்று ஐக்கிய குடியரசு முன்னணி கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய குடியரசு முன்னணி கட்சியின் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே சம்பிக்க ரணவக்க இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பழைய அரசியல் சம்பிரதாயங்களுக்கு எதிராக எழுந்த அரசியல் செயற்பாடுகளால் எழுந்த போராட்டங்களால் தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் வந்த மக்கள் விடுதலை முன்னணி ஆட்சிக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்று என்ன நடந்துள்ளது. அன்று பஸில் ராஜபக்ஷ வியத்மக மூலம் மக்கள் ஆணையை பிற்பொக்கட் அடித்ததை போன்று இன்று ரில்வின் சில்வாவும் விமல் ரத்நாயக்கவும் அந்த பெரும் மக்கள் ஆணையை பெலவத்த போல்ஷேவிக் கட்சிக்காக பிற்பொக்கட் அடித்துள்ளனர்.
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) என்பது வெளியில் தெரியும் லேபல் மட்டுமே. உள்ளே மறைந்துள்ள கட்சியொன்று உள்ளது. அதாவது ‘இலங்கை போல்ஷேவிக் லெனின்’ என்ற கட்சியொன்று உள்ளது. அந்த கட்சியினாலேயே இங்கே சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றது. நாங்கள் அறியாத, எமக்கு தெரியாத, தேர்தல்கள் ஆணைக்குழுவே அறியாத, மக்கள் முன்னால் வராத இரகசியமான நபர்கள் நாட்டை நடத்திச் செல்லும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலைமை தொடர்ந்தும் சென்று விமல் ரட்நாயக்க, அநுர திஸாநாயக்க மற்றும் ரில்வின் சில்வாவுக்கு தேவையானவாறு சூழ்ச்சிகரமான ஆட்சியை முன்னெடுத்துச் சென்றால் இந்த நாடு எதிர்காலத்தில் பெரும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நெரிடும் என்பதனை தெளிவானது. இதனால் இந்த நாட்டில் 2024 மக்கள் ஆணைக்கு பங்களிப்பு செய்த உண்மையான படித்தவர்கள், உண்மையான அபிமானம் மிக்கவர்கள், உண்மையாக இந்த நாட்டை நேசிக்கும் நபர்கள் மீண்டும் ஒன்றிணைந்து தங்களிடம் பிற்பொக்கட் அடித்த மக்கள் ஆணைகளை மீண்டும் மக்களிடம் ஒப்படைப்பதே ஐக்கிய குடியரசு முன்னணியின் பணியாகும் என்றார்.
![]()