இலங்கை

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கம் ஆராய்கிறது

உள்ளூரட்சித் தேர்தலை தொடர்ந்து உள்ளூராட்சி சபைகளை அமைக்கும் நடவடிக்கைகள் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்தக் கட்டமாக மாகாண சபைகள் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.

பாராளுமன்றத்தில் மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி தேர்தலை நடத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், மாகாண சபைகள் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்ட திருத்தங்களை செய்ய வேண்டியுள்ளது. அதனை நிறைவேற்றிய பின்னர் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். எல்லை நிர்ணயம் தொடர்பான பிரச்சினையால் தேர்தலை கடந்த அரசாங்கங்களே தள்ளி வைத்தன. ஆனால் இந்த அரசாங்கம் தேர்தலை ஒத்தி வைக்கும் கொள்கையில் இல்லை. இதன்படி தேர்தல் கூடிய விரைவில் நடக்கும் என தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *