சர்ச்சைக்குரிய வீட்டுத் திட்டத்தின் விபரங்களை வௌிப்படுத்திய உகுஸ்ஸா!

முறையான அனுமதி பெறாமல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வீட்டுத் திட்டத்திற்கு எதிராக கொழும்பின் லேக் டிரைவ் பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயத்தினை உகுஸ்ஸா வெளிப்படுத்தியது.
மக்கள்தொகை அதிகரிப்பால், வீடுகளை அமைப்பதற்காக காணப்படும் நில அளவு குறைந்து வருகின்றன.
இதனை கருத்திற்கொண்டே ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன.
இருப்பினும், இந்தத் திட்டங்களைத் தேவையான பல அனுமதிகளைப் பெற்ற பின்னரே செயல்படுத்த முடியும்.
இவ்வாறான சூழ்நிலையில், கொழும்பு 08, லேக் டிரைவ் பகுதியில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு பிரதேச மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
ஒரு பிரபலமான கட்டுமான நிறுவனம் இந்த திட்டத்திற்கு சமூக ஊடகங்களில் விரிவான விளம்பரத்தை வௌியிட்டிருந்தது.
அதன்படி, இந்தத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ள மேற்படி கட்டுமான நிறுவனத்திடம் அத தெரண வினவியபோது, இது 12 மாடி வீட்டுத் திட்டம் என்றும், சில வருடங்களுக்குள் நிச்சயமாக சட்டப்பூர்வமாகக் கட்டப்படும் என்று பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இருப்பினும், இந்தத் திட்டம் தொடர்பாக பிரதேச மக்கள் உட்பட பல தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இந்தக் கட்டுமானத்தின் சட்டபூர்வமான தன்மை குறித்து நகர அபிவிருத்தி அதிகாரசபையிடம் வினவி இருந்தோம்.
இந்த திட்டத்திற்காக மத்திய சுற்றாடல் அதிகாரசபை, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கொழும்பு மாநகர சபையின் கழிவுநீர் பிரிவு உள்ளிட்ட 7 தொடர்புடைய நிறுவனங்களிடமிருந்து முறையான அனுமதியைப் பெறுவதற்கான வாக்குறுதியின் அடிப்படையில் மட்டுமே இந்தத் திட்டத்தை மேற்கொள்வதற்கான அனுமதி பெறப்பட்டது என்று அறியமுடிந்தது.
இதன் விளக்கமானது, ஏதேனும் பிரச்சினை காரணமாக மேற்கூறிய ஒப்புதல்கள் பெறப்படாவிட்டால், இந்த வீட்டுவசதித் திட்டம் தொடர முடியாது, மேலும் அது நிறுத்தப்படும்.
எனவே, இதுவரை பெறப்படாத அனுமதி பெறப்படும் என்ற அனுமானத்தின் அடிப்படையில், இதை கொள்வனவு செய்பவர்களை சிக்கலில் சிக்க வைக்கும் ஒரு திட்டம் இது என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.
மேலும், இங்கு எழும் ஒரு நியாயமான கேள்வி என்னவென்றால், இந்த வீட்டுவசதித் திட்டத்திற்கான நுழைவு வீதியான லேக் டிரைவ் வீதி ஏற்கனவே பரபரப்பான வீதி மற்றும் அதன் உள்கட்டமைப்பு அத்தகைய திட்டத்திற்கு போதுமானதா என்பதுதான்.
ஆனால் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை என்னவென்றால், இந்த நன்கு அறியப்பட்ட கட்டுமான நிறுவனமானது மேற்குறிப்பிட்ட அனுமதி பெறவேண்டிய எந்தவொரு நிறுவனங்களிடமிருந்தும் அனுமதி பெறுவதற்கான கோரிக்கையை இன்னும் வைக்கவில்லை என்பது எமது விசாரணைகளில் தெரியவந்தது.
முறையான அனுமதி பெறாமல் கட்டுமானம் நிச்சயமற்ற நிலையில் இருக்கும் ஒரு திட்டம் குறித்து இதுபோன்ற விளம்பரங்களை மேற்கொள்வது நாட்டு மக்களை தவறாக வழிநடத்தும் செயல் இல்லையா?
![]()