உலகம்

பேச்சுவார்த்தைக்காக இஸ்ரேல் கத்தாருக்கு ஒரு குழுவை அனுப்ப உள்ளது!

காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தம் தொடர்பான சமீபத்திய திட்டம் குறித்து ஹமாஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இன்று கத்தாருக்கு ஒரு குழுவை அனுப்ப இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.

கத்தார், அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் மத்தியஸ்தர்கள் முன்வைத்த திட்டத்தில் ஹமாஸ் செய்ய விரும்பிய “ஏற்றுக்கொள்ள முடியாத” மாற்றங்கள் எனஅவர் விவரித்த போதிலும், அவர் அழைப்பை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 60 நாள் போர் நிறுத்தத்திற்கான திட்டத்திற்கு தயாராக இருப்பதாக ஹமாஸ் கூறியது.

இருப்பினும், நிரந்தர போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் போர் மீண்டும் தொடங்காது என்ற உத்தரவாதம் உள்ளிட்ட திருத்தங்களை குழு கோரியதாக பாலஸ்தீன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் , நேற்றைய தினம் காசாவில் , இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 78 பேர் கொல்லப்பட்டதாக சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *