உலகம்

இஸ்ரேல் – ஈரான் போரின் எதிரொலி; மசகு எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலுக்கு மத்தியில் கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் அதிகரித்துவந்த எண்ணெய் விலை இன்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.

இதன்படி, உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 66.19 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 69.21 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.66 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அத்தோடு சில நாட்களாகச் சர்வதேச சந்தையில் அதிகரித்து வந்த எண்ணெய் விலை இன்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில், தங்க விலையிலும் சிறிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.

அந்த வகையில், சர்வதேசத்தில் தங்கத்தின் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கையை பொறுத்தவரையில் நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று தங்க விலை 1,000 ரூபாயால் குறைந்துள்ளது.

அதன்படி 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 268,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 246,000 ரூபாயாகவும், 18 கரட் தங்கம் பவுண் ஒன்று 201,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,750 ரூபாயாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 25,125 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *