ஈரானின் ஆன்மீகதலைவர் கமேனியை கொலை செய்யும் இஸ்ரேலின் திட்டம் – தடுத்தார் டிரம்ப்

ஈரானின் ஆன்மீகதலைவர் ஆயத்தொல்லா கமேனியை கொலை செய்யும் இஸ்ரேலின் திட்டத்தினை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எதிர்த்தார் என அமெரிக்க அதிகாரிகள் சிபிஎஸ் நியுசிற்கு தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலிற்கு ஈரானின் ஆன்மீகதலைவரை கொல்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது,ஆனால் இது சிறந்த விடயமல்ல என டிரம்ப் இஸ்ரேலிய பிரதமருக்கு தெரிவித்தார் என அதிகாரியொருவர் சிபிஎஸ் நியுசிற்கு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ஈரான் மீதான தாக்குதலை ஆரம்பித்த பின்னரே இருவருக்கும் இடையில் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த விடயம் குறித்து ரொய்ட்டரும் செய்தி வெளியிட்டுள்ளது.ஈரானின் ஆன்மீக தலைவரை கொலை செய்வதற்கான நம்பதன்மை மிக்க திட்டமொன்றை உருவாக்கியுள்ளதாக இஸ்ரேலியர்கள் வெள்ளை மாளிகைக்கு தெரிவித்தனர் என இந்த விடயம் குறித்து நன்கறிந்த அமெரிக்க வட்டாரங்கள் தெரிவித்தாக ஏபி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்து தெளிவுபடுத்தப்பட்ட பின்னர் வெள்ளை மாளிகை அதிகாரிகள் டிரம்ப் இந்த திட்டத்தை எதிர்க்கின்றார் என இஸ்ரேலிய அதிகாரிகளிற்கு தெரிவித்துள்ளனர்.
![]()