உலகம்

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகள் ஈரானுக்கு அனுப்பிவைப்பு!

அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பான முன்மொழிவுகளை அமெரிக்கா, ஈரானுக்கு அனுப்பியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஓமான் வெளிவிவகார அமைச்சரின் ஊடாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறித்த முன்மொழிவுகளை, ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி பொறுப்பேற்றுள்ளார்.

அணுசக்தி ஆயுதங்களை உற்பத்தி செய்வதில் முக்கிய அங்கமான செறிவூட்டப்பட்ட யுரேனியம் உற்பத்தியை ஈரான் அதிகரித்துள்ளதாக, ஐக்கிய நாடுகள் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையை அடுத்து அமெரிக்கா தமது முன்மொழிவுகளை ஈரானுக்கு அனுப்பியுள்ளது.

இதேவேளை, குறித்த ஒப்பந்தத்தை ஈரான் ஏற்றுக் கொள்வது சிறந்த விடயமாக அமையுமென வெள்ளை மாளிகையின் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *