உலகம்
நாட்டை விட்டு பங்களாதேஷின் முன்னாள் ஜனாதிபதி தப்பியோட்டம்

பங்களாதேஷின் முன்னாள் ஜனாதிபதியும் அவாமி லீக் தலைவருமான முகமது அப்துல் ஹமீத் தாய்லாந்துக்கு விமானம் மூலம் தப்பிச் சென்ற சம்பவம், அந்நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
டாக்கா போஸ்ட்’டின் படி, ஹமீத் கடந்த வியாழக்கிழமை (8)அதிகாலை 3:00 மணிக்கு தனது மனைவி, சகோதரர் மற்றும் மைத்துனருடன் தாய் ஏர்வேஸ் விமானத்தில் ஏறினார்.
ஒரு காலத்தில் சக்திவாய்ந்த ஜனாதிபதியாக இருந்தவர் தப்பிக்கும்போது வெறும் லுங்கி மட்டும் அணிந்திருந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. அவர் தப்பிச் செல்வது பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.
![]()