உலகம்

இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வீட்டில் தீ விபத்து

வடக்கு இலண்டனில் உள்ள இங்கிலாந்து பிரதமர் சர் கீர் ஸ்டார்மரின் வீட்டில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினரும், பொலிஸாரும் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை, ஆனால் தீ விபத்தில் வீட்டின் ஒரு கதவு சேதமடைந்தது.

ஜூலை மாதம் பதவியேற்றதிலிருந்து, ஸ்டார்மர் பிரதமரின் அதிகாரப்பூர்வ டவுனிங் தெரு இல்லத்தில் வசித்து வருகிறார். விபத்து குறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *