சட்டவிரோத புலம்பெயர்மக்கள் தாமாகவே நாட்டைவிட்டு வெளியேற சலுகை அளிக்கும் ட்ரம்ப்

அமெரிக்காவில் எல்லை நெருக்கடியைத் தீர்க்க உதவும் வகையில் சுயமாக வெளியேற விரும்பும் எந்தவொரு சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கும் பணம் மற்றும் விமான டிக்கெட்டை வழங்க ஜனாதிபதி ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் பரப்புரையின் போதே, சட்டவிரோத புலம்பெயர் மக்களை நாட்டைவிட்டு வெளியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என டொனால்டு ட்ரம்ப் உறுதி அளித்திருந்தார்.
தற்போது, தமது நிர்வாகம் கொலைகாரர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதில் கவனம் செலுத்துகிறது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கு சுயமாக வெளியேறும் திட்டம் ஒன்றை செயல்படுத்த இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.