உலகம்
பிரித்தானியர்கள் அனைவரையும் கொன்றுவிடுவோம்: ரஷ்ய தரப்பு எச்சரிக்கை

பிரித்தானியா உக்ரைனுக்கு உதவுவதை, ரஷ்யாவுடன் நேரடியாக மோதுவதாக எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ள புடின் ஆதரவு ரஷ்ய செய்தியாளர் ஒருவர், பிரித்தானியர்கள் அனைவரையும் கொன்றுவிடுவோம் என எச்சரித்துள்ள விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
உக்ரைன் ஆதரவால் ஆத்திரம்
பிரித்தானியா தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்துவருவதாலும், சமீபத்தில் ஐரோப்பிய மற்றும் காமன்வெல்த் நாடுகளில் விருப்பமுடைய நாடுகள் தங்கள் படைகளை உக்ரைனுக்கு அனுப்புவது குறித்து பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் திட்டம் ஒன்றை முன்வைத்ததாலும் ரஷ்ய தரப்பு ஆத்திரம் அடைந்துள்ளது.

ஆகவே, புடின் ஆதரவு ரஷ்ய செய்தியாளரான Vladimir Solovyov என்பவர், பிரித்தானியர்கள் அனைவரையும் கொன்றுவிடுவோம் என எச்சரித்துள்ளார்.
அதாவது, அணு ஆயுதம் மூலம் பிரித்தானியாவை அழித்துவிடுவோம் என அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், பிரித்தானியாவுடன் இணைந்து பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் பிரான்ஸ் ஜேர்மனி மற்றும் பால்டிக் நாடுகளின் தலைவிதியும் சோகமானதாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார் அவர்.