மறுவாழ்வு மையத்தில் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார்; அதிர்ச்சியூட்டும் காணொளி வெளியானது

பெங்களூரு அருகே உள்ள ஒரு மறுவாழ்வு மையத்தில் நோயாளி ஒருவர் கொடூரமாக தாக்கப்படும் அதிர்ச்சியூட்டும் காணொளி வெளியாகியுள்ளது.
சிசிடிவி காட்சிகளில், அறைக்குள் ஒரு நபர் நான்கு பேர் முன்னிலையில் ஒரு நோயாளியை அடிப்பதைக் காட்டியது. பாதிக்கப்பட்டவர் இரண்டு ஆண்களால் இழுத்துச் செல்லப்பட்டதும் பதிவாகியுள்ளது.
பெங்களூருவிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெலமங்கலாவில் உள்ள ஒரு தனியார் மறுவாழ்வு மையத்தில் இந்த சம்பவம் நடந்தது.
பொலிஸார் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினர், இந்நிலையில், சம்பத்துடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர் மற்றொரு நபருடன் இருந்த அறைக்குள் மூன்று ஆண்கள் நுழைவதிலிருந்து காணொளி பதிவாகியுள்ளது. ஒருவர், தடியை கொண்டு பாதிக்கப்பட்டவரை இரக்கமின்றி தாக்கியுள்ளார்.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கூற்றுப்படி, பாதுகாவலரின் துணிகளைத் துவைக்க மற்றும் கழிப்பறையை சுத்தம் செய்ய மறுத்ததால் பாதிக்கப்பட்டவர் தாக்கப்பட்டதாக கூறப்பட்டது.
குறித்த காணொளில் சமூக ஊடங்களில் பகிரப்பட்ட பின்னர் பொலிஸார் மறுவாழ்வு மையத்தை சோதனை செய்தனர்.
இதனையடுத்து சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் பொலிஸாரால் சுயமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.