உள்ளூராட்சித் தேர்தலில் தோற்றால் மாகாண சபைத் தேர்தல் நடப்பது கேள்விக் குறி!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 50 வீதத்துக்கும் அதிகமான சபைகளை கைப்பற்றும் முயற்சியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஈடுபட்டுள்ள நிலையில், குறித்த இலக்கை அடைய முடியாவிட்டால் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கடுமையான நிலைப்பாட்டை எடுப்பதற்கு அரசாங்கம் தீவிரமாக சிந்திக்குமென
பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்துடன் மாகாணசபை தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், விரைவில் அதற்கான தேர்தலை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
எனினும் எதிர்வரும் மே 6 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகளுக்கு அமையவே மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தீர்மானத்தை எட்டுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 50 வீதத்துக்கும் அதிகமான பெரும்பான்மை வெற்றியை பெற்றுக் கொள்வதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. எந்தவொரு காரணத்திற்காகவும் 50 வீத பெரும்பான்மை வெற்றியை பெற முடியாவிட்டால், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதா இல்லையா என்பது குறித்து கடுமையான முடிவை எடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அறியப்படுகிறது.
இதேவேளை பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் 13 ஆவது அரசியல் திருத்தம் தொடர்பிலும் முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன.
மேலும் இந்தச் சந்திப்பின் பின்னர், இலங்கை அரசாங்கம் இலங்கை அரசியலமைப்பை முழுமையாக அமல்படுத்தி, மாகாண சபைத் தேர்தல்களை நடத்தி, தமிழ் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் என்று எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தனத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.